Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: ”மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை” மத்திய அரசு தகவல் …!!

வரும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடரும் என விமான போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பிரச்சனை மற்றும் ஊரடங்கு காரணமாக விமான சேவை நிறுத்தி வைக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் வரும் 25-ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகள் படிப்படியாக அனுமதிக்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே பல்வேறு விதமான போக்குவரத்துகளை கொஞ்சம் கொஞ்சமாக துவங்க அனுமதி தேவை என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்து கொண்டிருந்தன

ரயில் சேவை, விமான சேவை போன்றவற்றிற்கு தற்போது அனுமதி இல்லை என்று சொல்லப்பட்டிருந்தது. சிறப்பு விமானங்கள் மட்டுமே தற்போது இயக்கப்படுகின்றன. பிற நாட்டில் இருந்து இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்கு அல்லது மருத்துவ பொருட்கள் மற்றும் சரக்குகளை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்வதற்கு மட்டுமே இவை பயன்படுத்தப்படுகின்றன.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு நிலையிலேயே தற்போது மீண்டும் விமான சேவைகளை தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே மே 25ஆம் தேதி முதல் படிப்படியாக மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே தொடங்கி பின்னர் படிப்படியாக இந்த சேவைகள் அதிகரிக்கப்படும் என தெரிகிறது.

Categories

Tech |