காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு கொரோனா சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள சென்னையிலும் சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்னன்IAS நியமிக்கப்பட்டு அவரின் அதன் கீழ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சென்னைக்கு அருகில் இருக்கக்கூடிய காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்கள். கொரோனா தடுப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கு சென்னைக்கு அருகில் இருக்கக்கூடிய அண்டை மாவட்டங்களிலும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உதயச்சந்திரன் ஐஏஎஸ் சிறப்பு அதிகாரியாகவும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு பாஸ்கரன் ஐஏஎஸ் சிறப்பு அதிகாரியாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சுப்பிரமணியன் ஐஏஎஸ் என மூன்று அதிகாரிகள் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார்கள். அந்தந்த மாவட்ட ஆட்சியருடன் ஒருங்கிணைந்து கொரோனா பணிகளை மேற்கொள்ளுமாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல சிறப்பு அதிகாரிகள் மட்டுமல்லாமல் ஐபிஎஸ் அதிகாரிகளும் இந்த மூன்று மாவட்டங்களுக்கும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதன் படி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அன்பும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு வனிதாவும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பவானீஸ்வரி ஆகியோர் ஐபிஎஸ் அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார்கள். இந்த சிறப்பு அதிகாரிகளையும் ராதாகிருஷ்னன் IAS ஒருங்கிணைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.