உலகின் மொத்த மக்கள் தொகையை கணக்கில் எடுத்துக் கொண்டால், கொரோனா வைரஸ் காரணமாக ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” இந்தியாவில், கோவிட் காரணமாக நாட்டின் ஒரு லட்சம் மக்களுக்கு 7.9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 5,611 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 140 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,06,750 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், காரணமாக உலகம் முழுவதும் ஒரு லட்சம் மக்களுக்கு 4.2 பேர் இறந்துள்ளனர். அதுவே, இந்தியாவில் ஒரு லட்சம் மக்களுக்கு 0.2 இறப்புகள் பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளார். இதுவரை இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,303 ஆக உயர்ந்துள்ளது.மேலும் 42,298 பேர் குணமடைந்துள்ளனர் என்பது திருப்திகரமாக உள்ளது என இணை செயலாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை கொரோனவால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தற்போது 61,149 ஆக உள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 42,298 ஆக அதிகரித்துள்ளது. இதனை காரணமாக இந்தியாவில் மீட்பு விகிதம் 39.62% ஆக உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.