சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8000யை கடந்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உலகிற்கே பெருந்தொற்றாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சராசரியாக ஒவ்வொரு நாளும் மூவாயிரம், நாலாயிரம் என்ற அளவில் உயர்ந்து கொண்டு வருவது மத்திய அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக நேற்று 4ஆவது ஊரடங்கு தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 1,00,000யை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
முக்கிய நகரங்களான மகராஷ்டிரா, டெல்லி, சென்னை போன்றவை கொரோனாவின் மையமாக விளங்குகின்றது . தமிழகத்தில் கோயம்பேடு சந்தை மூலமாக எதிர்பார்க்காத அளவுவுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவலில், தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 13191 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அங்கு மட்டும் 8228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.