Categories
தேசிய செய்திகள்

திடீரென கேட்ட பயங்கர சத்தம்…. பூகம்பமும் இல்லை…என்னதான் நடந்தது பெங்களுருவில்..நீடிக்கும் மர்மம்!!

பெங்களுருவில் காதை கிழிக்கும் அளவிற்கு மர்ம ஒலியை உணர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களுருவில் பிற்பகலில் சமயத்தில் நிலநடுக்கத்தில் கட்டிடம் இடிந்து விழுவதை போல் பெரும் சத்தம் கேட்டது.

மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். வைட் பீல்ட், குக் டவுன், ஓசூர் சாலை, குந்தனகாளி, கம்மனகாளி உள்ளிட்ட இடங்களில் மர்ம சத்தத்தை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல, கிழக்கு பெங்களூர் பகுதியான, கே.ஆர்.புரம் துவங்கி இந்திரா நகர், கோரமங்களா, ஒயிட்பீல்டு, பன்னேருகட்டா சாலை, பொம்மனஹள்ளி, பேகூர், எலக்ட்ரானிக் சிட்டி என சம்பந்தமே இல்லாத தொலைதூர பகுதிகளிலுள்ள மக்களும் ஒரே நேரத்தில் இந்த சத்தத்தை உணர்ந்துள்ளனர்.

குறிப்பாக கே.ஆர்.புரம் பகுதியில் தான் இந்த ஒலியின் அளவு மிக அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. போர் விமானங்கள் பறக்கும் போது இதுபோன்ற சத்தம் கேட்கும். இதனால் விமான ஒத்திகை நடைபெற்றதா? என்று விமானப்படை உறுதி படுத்தாததால் காவல்துறையும் பொதுமக்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அதேநேரத்தில் நிலநடுக்கம் எதுவும் ஏற்படவில்லை என்று கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்புத்துறை தெரிவித்துள்ளது. பெங்களூருவை மிரட்டிய மர்ம சத்தம் குறித்து நெட்டிசன்கள் உருவாக்கிய மீம்ஸுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பெங்களூருவில் இன்று பிற்பகல் கேட்ட சத்தத்தை ஒரு வளிமண்டல நிகழ்வு என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |