Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு…. மொத்த பலி எண்ணிக்கை 87ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 660 பேரும், மஹாராஷ்டிராவில் இருந்து வந்த 83 பேர் என மொத்தம் 743 பேர் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 442 பேர் ஆண்கள், 301 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் 8,496 ஆண்கள் மற்றும் 4,692 பெண்கள் மற்றும் 3 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 வயதுக்குட்பட்ட 803 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 11,381 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 1,007 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று புதிதாக 557 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 8,228 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 987 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 5,882 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 44.59% பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 11,894 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 3,60,068 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 40 அரசு மற்றும் 23 தனியார் மையங்கள் என மொத்தம் 63 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |