Categories
மாநில செய்திகள்

கொரோனா தொற்று அறிகுறியுடன் 5,059 பேர் தனிமை கண்காணிப்பில் உள்ளனர்: சுகாதாரத்துறை!!

தமிழகத்தில் இன்று மட்டும் 11,441 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

இன்று மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, ” கொரோனா தொற்று உள்ளதா? என இன்று 11,441 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இதுவரை தமிழகத்தில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 793 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதேபோல, கொரோனா உள்ளதா என இன்று 11,894 மாதிரிகள் உட்பட இதுவரை 3 லட்சத்து 60 ஆயிரத்து 068 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை பரிசோதிக்க தமிழகத்தில் மொத்தம் 63 மையங்கள் உள்ளன. அதில், 40 அரசு பரிசோதனை மையங்கள் மற்றும் 23 தனியார் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா தொற்று அறிகுறியுடன் 5,059 பேர் தனிமை கண்காணிப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,191 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 987 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,882 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மொத்த உயிரிழப்புகள் விகிதம் 0.65% ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |