Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகத்தில் இன்று மட்டும் 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.

அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 58 பேருக்கும், திருவள்ளூரில் 23 பேர், காஞ்சிபுரத்தில் 14 பேர், திண்டுக்கல் மாவட்டத்தில் 1, கள்ளக்குறிச்சியில் 1, கிருஷ்ணகிரியில் 1, மதுரையில் 9, புதுக்கோட்டையில் -6, தென்காசியில் 3, தஞ்சாவூரில் 1, தேனியில் 3, தூத்துக்குடியில் 22, திருநெல்வேலியில் 16, விழுப்புரத்தில் 7, விருதுநகரில் 6 பேருக்கும், திருவண்ணாமலையில் 11 பேருக்கும் இன்று கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 557 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,228 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த 83 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. திண்டுக்கல் -1, கள்ளக்குறிச்சி – 1, புதுக்கோட்டை – 5, தென்காசி – 2, திருவண்ணாமலை -11, தூத்துக்குடி – 21, திருநெல்வேலியில் -16, விழுப்புரம் -6, விருதுநகர் – 5 என வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

மேலும் இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவனை மருத்துவர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,191 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 987 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,882 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7,219 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |