மிதுன ராசி அன்பர்களே …! இன்று உழைப்பின் மீதான நம்பிக்கை உருவாகும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். சேமிக்கும் விதத்தில் வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்துசேரும். இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன்பு அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் மட்டும் இருந்து கொண்டே இருக்கும்.
அவசர முடிவுகளை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். எதிர்காலம் பற்றிய முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள் அடுத்தவர் யோசனைகளைக் கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. முடிந்தால் ஒரு வீட்டில் பெரியவர்களின் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். புதிய முயற்சிகளில் கவனம் இருக்கட்டும். இன்று காதலர்களுக்கு இனிமையான நாளாக இருந்தாலும் வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடவேண்டாம். அதேபோல பழைய நினைவுகளால் சிறு சிறு பிரச்னைகளை சந்திக்க கூடும்
. கூடுமானவரை இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள் மிக சிறப்பாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.