Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…தைரியம் உண்டாகும்…கவலை ஏற்படும்…!

கன்னி ராசி அன்பர்களே …!   இன்று தைரியத்துடன் ஈடுபடுவீர்கள். இருந்தாலும் இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு திருப்தியான சூழலில் இருக்கும் உபரி வருமானம் வந்தாலும் சில நேரங்களில் பணம் தேவை இருக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்களை கையாளும் பொழுது கவனமாக கையாளுங்கள். இன்று வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஓரளவே இன்று சிறப்பான நாளாக இருக்கும்.

சமூகத்தில் அக்கறை இருக்கும் அது மட்டுமில்லாமல் நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள் தயவு செய்து நீங்கள் வாக்குறுதிகளையும் ஜாமீன் கையெழுத்து மட்டும் போட வேண்டாம். கூடுமானவரை மற்றவர்களுக்கு பணம்  பெற்றுத் தருகிறேன் என்று எந்தவித உத்திரவாதமும் கொடுக்க வேண்டாம்.  முடிந்த அளவு உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் கொள்ளுங்கள். சரியான உணவை எடுத்துக்கொள்ளுங்கள் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். பலரின் மறைமுக எதிர்ப்புகள் இன்று நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். திட்டமிட்டு செயலாற்றினால் அனைத்து வேலைகளும் மிக சிறப்பாக நடக்கும்.

மற்றவர்களிடம் அதிக நெருக்க வேண்டாம் வழக்கு விவகாரங்களை கொஞ்சம் கவனமுடன் கையாளுங்கள். தந்தையிடம் பேசும்போது நிதானமாகப் பேசுங்கள் சகோதர்களிடம் கொஞ்சம் ஒத்துழைத்து செல்லுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் அதுபோலவே என்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்ட திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |