நாடு முழுவதும் வரும் 25ம் தேதி உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட உள்ள நிலையில், வழிகாட்டும் நெறிமுறைகளை இந்திய விமான நிலைய மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி விமானம் புறப்பாடு பகுதியில் மேற்கொள்ள வேண்டிய 36 நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதேபோல வெறுப்பிற்கு பகுதியில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் 19 வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:
* விமான பயணிகள் அனைவருக்கும் ஆரோக்கிய சேது செயலி அவசியம்.எனவே பயணிகள் கட்டாயம் இந்த செயலியை பயன்படுத்த வேண்டும்.
* 14 வயதுக்கு குறைவான குழந்தைகள் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த தேவையில்லை.
* விமான பயணிகள் அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் கையுறை கட்டாயம் வழங்கப்படவேண்டும்.
* பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் விமான நிலையத்திற்கு வரக்கூடிய வகையில் அவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை மாநில அரசுகள் செய்து தரவேண்டும்.
* வாகனங்கள் நிறுத்துமிடங்கள் முழுமையாக கண்காணிக்கப்படவேண்டும்.
* சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா? என்பதை மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் உறுதி செய்வார்கள்.
* விமான நிலையத்தில் பயணிகளை இறக்கி விட மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும். மேலும் அதிகார பூர்வமாக பாஸ் வைத்துள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
* அடுத்த 4 மணி நேரத்திற்குள் பயணிக்க இருப்பவர்கள் மட்டுமே விமான நிலையத்திற்குள் அனுமதி.
* பயண நேரத்திற்கு 2 மணி நேரம் முன்பாக பயணிகள் விமான நிலையம் வந்தடைய வேண்டும்.
* விமானத்திற்கு வரும் பயணிகள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேன் செய்யப்படும்.
* ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்தி வரும் அனைவருக்கும் செயலியில் பச்சை நிறம் காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
* பயணிகளின் உடல் வெப்பநிலையும் சோதிக்கப்படும்.