Categories
மாநில செய்திகள்

பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் ரத்து – உயர்நீதிமன்றம்உத்தரவு!

பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் மீதி தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழக அரசு மீதி அவதூறு பரப்புவதாக கடந்த 2012ம் ஆண்டு தமிழ், ஆங்கில பத்திரிக்கைகள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் 28 வழக்குகள் தொடரப்பட்டது. முரசொலி மீதி 20 வழக்குகள், டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்து, நக்கீரன், தினமலர், தி இந்து மீதி 2 வழக்குகள் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி தி இந்து பத்திரிக்கை சார்பில் என். ராம் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

மேலும் தினகரன் சார்பில் அதன் ஆசிரியர் ஆர்.எம். ஆர். ரமேஷ், முரசொலி செல்வம், நக்கீரன் கோபால், தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி அப்துல் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தொடர்ந்து அவதூறு வழக்குகள் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரானது என பத்திரிகையாளர்கள் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

மேலும் மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் விதமாக செய்திகள் போடப்பட்டுள்ளது, சுதந்திரத்தை நசுக்கும் வகையில் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. தமிழக அரசு தொடர்ந்து வழக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது,இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது என வாதம் செய்த நிலையில் தமிழக அரசு தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் மீது தமிழக அரசு தொடர்ந்த அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Categories

Tech |