Categories
உலக செய்திகள்

நாங்கள் தான் முதலிடம்…! ”அதிகமான கொரோனா பெருமையே” டிரம்ப் பெருமிதம் …!!

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டதில் முதலிடம் அமெரிக்கா என்பது பெருமையே என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தொடங்கி உலகையே கதறவிடும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 200க்கும் மேற்பட்ட நாடுகள் சிக்கியுள்ளது. 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனவால் தாக்கப்பட்டு, உயிரிழப்பு 3 லட்சத்து 30 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவின் கோர தாண்டவத்தில் சிக்கி உருக்குலைந்து உள்ளது. அங்கு மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு 16 லட்சத்தை நெருங்குகிறது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 93 ஆயிரத்தை தாண்டிவிட்டது.

இதனால் கொரோனவை  கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு தவறிவிட்டார் என்று அவர் மீது ஏராளமான விமர்சனங்கள் முன்வைத்த போதிலும் அதையெல்லாம் சளைக்கலால் விமர்சங்களை கடந்து வருகின்றார். நேற்று, அமெரிக்கா கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருப்பது பெருமை என்று  பேசியுள்ளார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர, உலக அளவில் அதிக அளவு கொரோனா உள்ள நாடு அமெரிக்காதான் என்பது கூட ஒரு கௌரவம் தான்.

ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் நான் இதை சிறப்பு வாய்ந்ததாக பார்க்கிறேன். நம் நாட்டில் கொரோனா பரிசோதனை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. உலகிலேயே அதிகமான பரிசோதனை நாம் செய்துள்ளோம். எனவே அதிகமாக கொரோனா இருப்பதை நான் மோசமாக பார்க்கவில்லை உண்மையில் இது ஒரு கௌரவமான விஷயம்தான். நமது பரிசோதனை தொழில்நுட்ப வல்லுநர்கள் செய்த அனைத்து வேலைக்கும் கிடைத்த ஒரு கௌரவம் என்று பெருமிதம் தெரிவித்தார். 

Categories

Tech |