Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு மாணவர்களுக்காக 12,674 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்!

10ம் வகுப்பு மாணவர்கள் அச்சமின்றி அந்தந்த பகுதிகளிலேயே தேர்வு எழுதலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியார்களை சந்தித்த அவர், 10ம் வகுப்பு மாணவர்களுக்காக 12,674 தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். தமிழகத்திபோல் கொரோனா காரணமாக 10ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வருகிற ஜூன் மாதம் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில், நாடு முழுவதும் 4ம் கட்டமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது மேலும் சில தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டிருந்தது, குறிப்பாக பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது. மேலும், தமிழகத்தில் சென்னை,காஞ்சியரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற 25 மாவட்டங்களில் சில ஊரடங்கு தரவுகளை வெளியிட்டது.

அதில் குறிப்பாக உள்ளூர் பகுதிகளில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், தேர்வு நடக்குமா? என்ற கேள்வி எழுந்தன. இது தொடர்பாக நேற்று முன்தினம் முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் தேர்வுகள் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 15ம் தேதி முதல் ஜூன் 25ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவித்தார். அதன்படி தேர்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர்கள் கொரோனா குறித்து அச்சப்படவேண்டாம் என கூறியுள்ளார்.

Categories

Tech |