Categories
மாநில செய்திகள்

குறுவை சாகுபடிக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை!

குறுவை சாகுபடிக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு தமிகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் விவசாயம் செய்து வருகின்றனர். ஆண்டு தோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் உரிய மழை இல்லாத காரணத்தாலும், கர்நாடகா மாநிலம் முறையாக தண்ணீரை தராததாலும் மேட்டூர் அணையை பொறுத்தவரை கடந்த 8 ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படவில்லை.

மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாக உள்ள நிலையில், கிட்டத்தட்ட 90 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே தண்ணீர் திறக்கப்படும். தற்போதைய நிலவரப்படி அணையில் நீர்மட்டம் 100 அடியாக உள்ளதால் ஜூன் 12ம் தேதி குருவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி கடந்த வாரம் அறிவித்துள்ளார். இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் தண்ணீர் திறக்கும் முன்னர் கடைமடை வரை நீர் செல்ல உடனடியாக தூர் வாரும் பணிகளை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். குறுவை சாகுபடிக்கு ஏற்ற நெல் விதைகள் மற்றும் உரங்கள் தேவையான அளவு இருப்பில் வைத்து விவசாயிகளுக்கு விநியோகிக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில் அதனை உடனாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்டா விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |