நாளை முதல் 1.70 லட்சம் பொது சேவை மையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம் என்று ரயில்வேத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி முதல் 200 ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் தான் தற்போது இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை மத்திய அமைச்சர் கொடுத்திருக்கிறார். அதில், நாடு முழுவதும் உள்ள 1.70 லட்சம் பொது சேவை மையங்களில் இந்த ரயில்களுக்கான டிக்கெட் நாளை முதல் முன்பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதே போல ரயில்நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில் இரண்டு அல்லது மூன்று நாட்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும். இது தொடர்பாக ஒரு நெறிமுறையை நாங்கள் உருவாக்கி வருகிறோம், அதற்கான முழு அறிவிப்பு மத்திய ரயில்வே துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் தெளிவாக பதிவேற்றம் செய்யப்படும் என்றும் தற்போது மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறார்.