ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாதவன் நகரில் 23 வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதித்த பெண் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சிவகங்கையில் இதுவரை 26 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. அதில் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மீதம் 14 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இன்று திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் மதுவிலக்கு காவல் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதையடுத்து பெரியபாளையம் காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கொரோனா வைரஸால் 8,496 ஆண்கள் மற்றும் 4,692 பெண்கள் மற்றும் 3 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 44.59% பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 87ஆக இருந்த நிலையில் இன்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். இதனால் மொத்த பலி எண்ணிக்கையானது 88ஆக உயர்ந்துள்ளது.