Categories
உலக செய்திகள்

பிரேசிலில் கொரோனாவுக்கு கொத்துக்கொத்தாக மடியும் மக்கள்… ஆயிரக்கணக்கில் உருவாக்கப்படும் சவக்குழிகள்!

அமெரிக்காவை தொடர்ந்து பிரேசில் மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 21,500 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 911 உயிர்களை பறித்து சென்றுவிட்டது. பிரேசிலில் மட்டும் 2 லட்சத்து 93 ஆயிரத்து 357 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளும் 19,000 ஆக உயர்ந்துவிட்டது.

இங்கு தினமும் கொத்துக்கொத்தாக உயிரிழந்து வருபவர்களை அடக்கம் செய்வதற்காக ஆயிரக்கணக்கில் சவக்குழிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே வேலை பளுவால் அழுத்தத்தில் இருக்கும் மருத்துவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக பிரேசில் ராணுவத்தினர் மருத்துவமனையிலேயே இசை நிகழ்ச்சிகளை அரகேற்றி வருகின்றனர்.

இதேபோல, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவும் திணறி வருகிறது. இங்கு ஒரே நாளில் 3,000த்திற்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த 650 பேர் உயிரிழந்ததால் மெக்சிகோவில் பலி எண்ணிக்கை 6,100 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |