Categories
தேசிய செய்திகள்

திருச்சி உட்பட நாட்டில் 10 விமான நிலையங்களை தனியார் மயமாக்க முடிவு: ஹர்தீப் சிங்!!

திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் தகவல் அளித்துள்ளார்.

மேலும், லக்னோ, குவாஹாத்தி, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், அகமதாபாத் ஆகிய விமான நிலையங்களும் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல வாரணாசி, இந்தூர், புவனேஸ்வர், ராய்ப்பூர் உள்ளிட்ட விமான நிலையங்களும் தனியார் மயமாக்கப்படுகின்றன. மேலும் உள்நாட்டு விமான பயணத்திற்கு புதிய நெறிமுறைகளை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவித்துள்ளார். அதில், கொரோனா தொற்று உறுதியானவர்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளார்.

இருமல், காய்ச்சல் போன்ற நோய் அறிகுறி உள்ளவர்கள் அமர விமானத்தில் தனி இடத்தில் இருக்கை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் 2 மணி நேரத்திற்கு முன்னதாவே விமான நிலையத்திற்கு வர வேண்டும். உடன் எடுத்துவரும் 2 பைகளை தவிர வேறு சுமைகளை கொண்டு வரக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை அவர் வெளியிட்டார். மேலும், அனைத்து பயணிகளும் ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.

பயணிகள் விமானத்தில் உட்கொள்ள தாங்களே உணவைக் கொண்டு வரவேண்டும் என கூறியுள்ளார். விமானங்கள் வந்த உடனும் புறப்படும் முன்பும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். பெரும் பெருநகரங்களுக்கு இடையே வழக்கமாக இயக்கப்படுவதில் மூன்றில் ஒரு பங்கு விமானங்களே இயக்கப்படும். பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பதுடன் கை சுத்திகரிப்பனை கொண்டு வர வேண்டும்.

இந்த குறைக்கப்பட்ட விமான சேவை திட்டம் ஆகஸ்ட் மாதம் வரை தொடரும் என தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 7 தடங்களில் விமான சேவைகள் தொடங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முதல் தடத்தில் 40 நிமிடம், 2வது தடத்தில் 60 நிமிடம், 3வது தடத்தில் பயண நேரம் 90 நிமிடங்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 4வது தடத்தில் 120 நிமிடம், 5-வது தடத்தில் பயண நேரம் 120 முதல் 150 நிமிடங்களாக இருக்கும். 6வது தடத்தில் 150 முதல் 180 நிமிடங்கள், 7வது தடத்தில் 180 நிமிடத்தை விட அதிக பயண தூரம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |