Categories
உலக செய்திகள்

கொரோனா மூலம் சீனா செய்த படுகொலை இது – ஆவேசமடைந்த ட்ரம்ப் …!!

கொரோனா வைரஸை பரப்பி உலகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் படுகொலை செய்ததாக சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவை தடம் தெரியாத அளவுக்கு சீதைத்துள்ளது.  அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 22,140 பேருக்கு கொரோனாஉறுதி செய்யப்பட்டு, நேற்று மட்டும் 1,403 பேர் மரணமடைந்துள்ளார். மொத்த பாதிப்பு 1,592,723ஆகவும், மொத்த பலி 94,936ஆகவும் இருந்து வருகின்றது. அங்குள்ள நியூயார்க், இல்லினாய்ஸ், நியூ ஜெர்சி, மாசசூசெட்ஸ் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளன.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தனது அமைச்சர்களுடன் கொரோனாவை தடுப்பது குறித்து வெள்ளை மாளிகையில் ஆலோசனைகளை மேற்கொண்டார். சீனாவின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வரும் டிரம்ப், கொரோனா மூலம் சீனா ஒரு தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.கொரோனா  வைரஸை கட்டுப்படுத்த முடியாத சீனாவின் மெத்தனப் போக்கால் உலகம் முழுவதும் பெரும் படுகொலை நிகழ்த்தப்பட்டதாக ஆவேசத்துடன் டிரம்ப் பேசினார்.

 

Categories

Tech |