Categories
தேசிய செய்திகள்

நடப்பாண்டில் 20% செலவீனத்தை குறைக்க அரசாணை… அரசு ஊழியர்களுக்கு போட்ட கெடுபிடிகள் என்ன? விவரம்!!

நடப்பு நிதியாண்டில் மொத்த செலவீனத்தில் 20% செலவை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா நோய் தொற்றால் தமிழக அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த நிதி சுமையை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில் கொரோனாவால் ஏற்பட்ட எதிர்பாராத செலவினங்களை ஈடு செய்யும் வகையில் பல்வேறு நிதி சிக்கனங்களை அறிவித்துள்ளது.

அதில் அரசு அதிகாரிகளின் பயண செலவு, அலுவலகங்களுக்கு கொள்முதல் செய்யும் பொருட்கள் என பல்வேறு செலவீனங்களை குறைக்க முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

* அரசு செலவில் உயர் அதிகாரிகள் வெளிநாடு செல்ல அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
* அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்புகளில் பயணிக்க அனுமதி கிடையாது.
*அரசு அலுவலகங்களில் புதிதாக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் அனுமதி இல்லை
* அலுவலக ரீதியாக விருந்து, மத்திய உணவு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ளது.
* கருணை அடிப்படையிலான பணிகள் மட்டும் ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்தலாம்.
* நடப்பு நிதியாண்டுக்கான பொதுவான பணியிட மறுதலைகள் நிறுத்தி வைக்கப்படுகிறது.
* அரசு விழாக்களில் வழங்கப்படும் சால்வை, பூங்கொத்து, நினைவு பரிசுககை தவிர்க்க வேண்டும்.
* பிற மாநிலங்களுக்கு விமானம் மூலம் பயணிக்கும் பொழுது ரயில் கட்டணத்திற்கு இணையான கட்டணத்திற்கு மட்டுமே அனுமதி.

* அரசு அதிகாரிகளுக்கான தினப்படி25% குறைக்கப்பட்டுள்ளது.
* நிர்வாக ரீதியான பணிமாற்றத்திற்கு மட்டுமே அனுமதி. பொதுவான பணிமாற்ற நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும்.
* விளம்பர செலவுகளை 25% குறைத்துக்கொள்ளவும் அரசு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
* பல்வேறு துறைகளில் 25% முதல் 50% வரை செலவுகளை குறைக்கவும் முடிவு.
* சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் அரசின் உதவியளிக்கும் திட்டங்களுக்கு மட்டுமே உபகரணங்கள் கொள்முதல் செய்ய அனுமதி.

* இயந்திரங்கள்,மோட்டார் வாகனங்களை வாங்குவதற்கான செலவு 25% குறைக்கப்பட்டுள்ளது.
* கணினி மற்றும் உதிரிபாகங்களை வாங்குவதற்கான ஒதுக்கீடு 25% குறைப்பு.
* வழக்கமான அலுவலக பணி செலவு 20% குறைப்பு. மேஜைகள் உள்ளிட்டவைகளுக்கு 50% குறைப்பு.
* அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயணப்படி மறு உத்தரவு வரும் வரை நிறுத்திவைப்பு.
* வெளிமாநிலங்களுக்கு அதிகாரிகள் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்படுகிறது.

மேற்கண்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அரசு அதிகாரிகளுக்கு தமிழக அரசு விதித்துள்ளது.

Categories

Tech |