Categories
மாநில செய்திகள்

Breaking : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 567 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 8,795ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த 679 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 79 பேர் என மொத்தம் 776 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 12,462 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3,72,532 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 400 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 6,282ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 41 அரசு மற்றும் 25 தனியார் மையங்கள் என மொத்தம் 66 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 7,588 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |