தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. ஈரோடு, அரியலூர், கோவை, கன்னியாகுமரி, நாகை, நீலகிரி, பெரம்பலூர், சேலம், திருவாரூர், திருச்சி, திருப்பூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
10 விமானங்களில் சென்னை வந்த 2,139 பேரில் 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று புதிதாக 567 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 8,795ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 679 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 79 பேர் என மொத்தம் 776 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 12,462 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 3,72,532 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 400 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 6,282ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 44.98% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.