Categories
மாநில செய்திகள்

முதல் சோதனையில் நெகட்டிவ்… மறுபரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் வருவதால் சவாலாக உள்ளது: விஜயபாஸ்கர்

கொரோனா பரிசோதனையில் முதலில் நெகட்டிவ் வருகிறது. மறு பரிசோதனையில் தொற்று பாசிட்டிவ் வருவதால் மிகவும் சவாலாக உள்ளது.

மறுபரிசோதனையில் மட்டும் இதுவரை 28 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 776 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 567 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,804 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 400 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,282 ஆக அதிகரித்துள்ளது.

ஈரோடு, திருப்பூர், கோவை உட்பட சில மாவட்டங்களில் 28 நாட்களாக எந்த பாதிப்பும் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். மேலும், கோவை, ஈரோடு, திருப்பத்தூர், திருவாரூர் மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் கிடையாது என தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் கொரோனா பரிசோனத்தை மையம் 66 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 41 அரசு பரிசோதனை மையங்கள், 25 தனியார் பரிசோதனை மையங்கள் செயல்ப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |