பாஜக தலைவர் முருகனை சந்தித்த திமுக திமுக துணை பொதுசெயலாளர் வி.பி துரைசாமி பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திமுகவின் துணை பொதுசெயலாளர் வி.பி துரைசாமி கடந்த 18ஆம் தேதி பாஜக மாநில தலைவர் முருகனை சந்தித்தார். இது திமுகவிற்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் வி.பி துரைசாமி பாஜகவில் இணைய போகிறார் என்றெல்லாம் பேசப்பட்டன. இந்தநிலையில் தான் பாஜக தலைவர் சந்திப்பு குறித்து வி.பி துரைசாமி விளக்கம் அளிக்கையில், இன்னும் பல பதவிகள் பெற்று நீண்ட காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்தினேன் என்று சொன்னேன்.
முரசொலி நில விவகாரத்தில் யார் மனு கொடுத்தார்கள் ? என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது ? ஐகோர்ட்டில் வந்தது ஸ்டே வாங்குனது மட்டும் தான் எனக்கு தெரியும். எல்லாரும் இங்கே ஜாதி எங்க என கேட்கிறார்கள், ஆனால் பதவி கொடுக்க மாட்டார்கள். அப்படி பதவியை பெற்ற அவருக்கு வாழ்த்து சொல்வது தப்பு என்றால், இது என்னவென்று தெரியவில்லை. தலைவர் ஸ்டாலின் என்ன முடிவு எடுத்தாலும் சரி தான் என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து தற்போது திமுக தலைவர் முக.ஸ்டாலின் சார்பில் வெளியான அறிக்கையில், வி.பி துரைசாமி வகித்து வந்த துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு பதிலாக அண்மையில் மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்பட்ட அந்தியூர் செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.