மேஷ ராசி அன்பர்களே …! இன்று தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சாதனை படைக்கும் நாளாக இருக்கும். தன வரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் வளம் கருதி புதிய கூட்டாளிகளை சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் பேச்சுக்கு எதிர்த்துப் பேசுவதை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாக பழகும் போது மட்டும் நல்லது. இன்று தன்னம்பிக்கையுடன் அனைத்து விஷயங்களிலும் எதிர்கொள்கிறீர்கள். காரிய வெற்றி ஏற்படும். எதிர்ப்புகள் விலகி செல்லும். நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாகவே இருக்கும். காதலர்களுக்கும் இன்று இனிமையான நாளாக இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர் நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6
அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெளிர் நீல நிறம்.