Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…கவனம் தேவை…திருப்தி உண்டாகும்…!

தனுசு ராசி அன்பர்களே …!    இன்று வள்ளல்களின் உதவிகள் கிடைத்து வளர்ச்சி கூடும்.  தொல்லை கொடுத்தவர்கள் தோள்கொடுத்து உதவுவதற்கு முன் வருவார்கள். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டபடி செயல்படுவது நல்லது. பயணங்கள் செல்லும்போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று தோன்றலாம். இன்று  கவனத்தை சிதறவிடாமல் காரியங்களைச் செய்யுங்கள். எதிலும் நிதானமான   காரியத்தில் ஈடுபடுங்கள். இன்று ஓரளவு முன்னேற்றத்திற்கு அனைத்து விஷயங்களும் வழிவகுக்கும். இறை வழிபாட்டுடன் காரியத்தை செய்யுங்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ரொம்ப சிறப்பாகவே இருக்கும். உள்ளமும் மகிழ்ச்சியாகவே காணப்படும்.

காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். காதல் கைகூட கூடிய சூழலும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |