Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…சிக்கல்கள் ஏற்பட்டும்…சிந்தனை மேலோங்கும்…!

கும்ப ராசி அன்பர்களே …!   இன்று  விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவை.  வீடு மாற்றம் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எதிர்பாராத செலவுகள் மட்டும் உருவாகும். அவ்வப்போது மனதில் குழப்பங்கள் இருக்கும். தாயின் உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல்கள் ஏற்பட்டு சரியாகும்.

பணவரவு தடைபட்டாலும் வந்து சேரும். வியாபார பொறுப்புகளை ஒப்படைக்கும் பொழுது கவனமாக இருங்கள். ரகசியங்களை தயவுசெய்து யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். இன்று குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் ஓரளவு சிறப்பாக இருக்கும். காதலர்களுக்கும் இன்று முன்னேற்றமான நாளாகவே இருக்கும். காதலில் புதிதாக வயப்படக்கூடிய சூழலும் இருக்கும்.

வசீகரமான பேச்சால் அனைவரையும் இன்று நீங்கள் கவருவீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்கள்: 3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |