பொறுப்புகளையும் பகிர்ந்தளித்து கொரோனா பேரிடரை எதிர்கொள்வதே ஏற்கத் தகுந்ததாகும் என்று முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில், கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், மாநகராட்சிகளிலும் சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ள அ.தி.மு.க. அரசு – அந்தப் பகுதிகளில் உள்ள அமைச்சர்களையோ அல்லது மக்கள் பிரதிநிதிகளையோ அந்தக் குழுக்களில் இடம்பெறச் செய்யாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.
அதிகாரப் போட்டி, பொறாமை:
ஒவ்வொரு பகுதியிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக – ஏற்கனவே அந்தந்தப் பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கு மேல், “சிறப்பு அதிகாரிகளை” நியமித்திருப்பதால் மட்டுமே – கொரோனா நோய் கட்டுக்குள் வந்து விட்டதாகத் தெரியவில்லை. இது அதிகாரிகளுக்குள்ளே அதிகாரப் போட்டி, பொறாமை ஆகியவற்றை ஏற்படுத்தவே பயன்படும். தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மக்களின் அச்சம் பெருகிக் கொண்டே இருக்கிறது.
மக்கள் பிரதிநிதிகளை பயன்படுத்துங்கள்:
ஊரடங்கு தளர்வுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் – மக்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பணியில் அதிகாரிகளுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் பயன்படுத்தினால்தான் சிறப்பாக இருக்கும். ஏனென்றால், மக்கள் தங்கள் குறைகளை அவர்களிடம்தான் நெருங்கி, தயங்காமல் கூறுவதற்கான வாய்ப்பு உருவாகும்; உடனடி கோரிக்கைகளை நிறைவேற்றிடவும் முடியும். உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை கிடைக்காமல் அவதிப்படுவோருக்கு நிவாரணங்களை விரைவுபடுத்த முடியும்.
கூட்டு முயற்சி – கை கொடுக்கும் :
நோய்ப் பாதிப்பின் பீதியில் இருக்கும் மக்களிடம், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களால்தான் நேரடியாக ஆறுதல் கூறி – சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினி போன்ற தனி நபர் பாதுகாப்பினைச் செய்து கொள்ள வேண்டும் என்று ஆக்கபூர்வமாக வலியுறுத்தி – போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திட முடியும். “சிறப்பு அதிகாரிகளை” நியமித்துவிட்டால் – அதிகாரிகள் அடங்கிய பல்வேறு குழுக்களை நியமித்து விட்டால், தன் கடமை முடிந்து விட்டது என்ற மனப்பான்மையில் முதலமைச்சர் செயல்படுவதை ஒருங்கிணைந்த முயற்சியாகக் கருதிட முடியாது.ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கொண்ட “கூட்டு முயற்சி” ஒன்றே இதுபோன்ற நேரத்தில் கை கொடுக்கும்; மக்களின் உயிரைப் பாதுகாக்கும்.
https://www.facebook.com/arivalayam/posts/3189920267705436
கூட்டு முயற்சி:
தட்டிக் கழிக்காதீங்க:
முதலமைச்சர் திரு. பழனிசாமி, தனது அமைச்சர்களுக்குள்ளேயே “ஒருங்கிணைப்பு” இன்றி – “கொரோனா பற்றிய அனைத்தும் எனக்கு மட்டுமே தெரியும்” என்பது போல் செயல்படுவது – அமைச்சரவைக்கே உரிய கூட்டுப் பொறுப்பு திட்டமிட்டுத் தட்டிக்கழிக்கப்படுவது, ஆபத்தான போக்காகும். இந்நிலையில் கொரோனா நோய்த் தடுப்பில் அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எடுக்கவும், அதிகரித்து வரும் நோய்த் தொற்றை முறைப்படி தடுக்கவும், எங்கெங்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களோ – அங்கெல்லாம் உள்ள மக்கள் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு கை தட்டினால் ஓசை வராது:
‘ஒரு கை தட்டினால் ஓசை வராது’ என்பதை முதலமைச்சர் உணர வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைப் புறக்கணிப்பதால், கொரோனா தடுப்பின் தீவிர நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டு – பெருமளவு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் இந்த நேரத்தில் – மக்களிடம் மிக ஆபத்தான பாதுகாப்புக் குறைபாடுகளை ஏற்படுத்தி, நோய்த் தொற்று அதிகரிக்கக் காரணமாக அமைந்து விடும் என்பதை முதலமைச்சர் திரு. பழனிசாமி உணர்ந்திட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்று நான் கூறுவது – ஏதோ, திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்காக மட்டுமல்ல; அ.தி.மு.க.,வில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
கேரளாவை பாருங்க:
அமைச்சரை நம்புங்க: