Categories
அரசியல் மாநில செய்திகள்

அவுங்கள பாருங்க…! ”நீங்க ரொம்ப மோசம்” குடைச்சல் கொடுக்கும் ஸ்டாலின் …!!

இந்தியாவையே பாரபட்சம் பார்க்காமல் அனைத்து மாநிலங்களையும் நடுங்கச் செய்து வரும் கொரோனவைரஸ்சுக்கு எதிராக மாநில அரசுகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தி வருகின்றன. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் ஒரு லட்சத்தி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தார் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும், அதே வேளையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 3600 நெருங்கி வருகிறது.

முதலிடம் வகித்த கேரளா:

இந்தியாவிலேயே முதன் முதலில் கொரோனா கண்டறியப்பட்ட மாநிலம் கேரளா. அதனைத் தொடர்ந்துதான் டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா உறுதிசெய்யப்பட்டது. தொடக்கத்தில் கேரளா கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் தான் இருந்தது. அதனை தொடர்ந்து மகாராஷ்டிரா, தமிழ்நாடுக்கு ஈடு இணையாக போட்டி போட்டுக்கொண்டு முதலிடம் இரண்டாவது இடம் என்று வந்த கேரளா தற்போது கொரோனா பாதிப்பை முற்றிலும் கட்டுப்படுத்தி உள்ளது. ஆனால் மகாராஷ்டிரம், தமிழ்நாடு பிடியில் சிக்கியுள்ளன. இங்கு கொரோனா கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது.

இந்தியளவில் 17ஆவது இடம்:

தற்போதைய சூழலில் கொரோனா பாதிப்பில் இந்தியளவில் 17 ஆவது மாநிலமாக கேரளம் இருக்கிறது. முதலிடத்தில் இருந்த கேரளா 17ஆவது இடத்திற்கு வந்துள்ளது நாடு முழுவதும் உள்ள மாநில அரசுக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன ? எந்த மாதிரியான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன ? என்று பலரும் கேரள மாநிலத்திடம் ஆலோசனை கேட்டு புகழ்ந்து தள்ளுகின்றனர், வெளிநாட்டு ஊடகங்களும் கேரள அரசாங்கத்தை புகழ்கிறது, இதனை நினைவூட்டும் வகையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

பெஸ்ட் ஆன தமிழகம்:

இன்றைய நிலைமையில் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கும் மிகவும் அதிகமாக இருக்கின்றது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,500 சென்றுகொண்டிருக்கின்றது. 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தடுப்பு சிகிச்சை சிறப்பாகவே மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவிலேயே குறைந்த உயிரிழப்பு வீதம் தமிழ்நாடு தான் என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் பாராட்டப் பெற்றது. தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதில் இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டி திமுக தலைவர் மு க ஸ்டாலின் விமர்சித்து வருகின்றார்.

யாரையும் சேர்க்கல:

தமிழகத்தில் கொரோனவை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழுவில் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெறாமல் இருப்பதை கண்டித்து திமுக ஸ்டாலின் நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக எடப்பாடி பழனிச்சாமி மக்கள் பிரதிநிதிகளையும், அதிமுக அமைச்சர்களையும் சிறப்புகுழுவில் இணைக்க வில்லை என்று குறிப்பிடுகின்ற சாராம்சத்தை விளக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கேரளாவை பாருங்கள்:

தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகளை அரசு கொரோனா தடுப்பு பணிகளுக்கு அமைத்துள்ள சிறப்பு குழுவில் இடம்பெற செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் நாம் இன்னும் பணியை வேகமாக செய்ய முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, அந்தஅறிக்கையில் கேரளாவில் மாநில அளவில் ஊராட்சி வார்டு ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  கேரளாவை பார்த்து தமிழக முதல்வர் தன்னை திருத்திக் கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டு ஸ்டாலின் அதிமுகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அதிமுகவுக்கு குடைச்சல்:

இது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இங்கு நடக்கும் விஷயங்களை மு க ஸ்டாலின் அரசியல் செய்து தேசிய அளவில் கோர்த்து விடுகிறார். மாநிலம் விட்டு மாநிலம் ஒப்பீட்டு நம்முடைய சிறப்பான நடவடிக்கைகளையும் கேள்விக்குறியாக்குகின்றார், சாமானிய மக்களும் யோசிக்கும் அளவிற்கு மு க ஸ்டாலின் குறிப்பிட்ட அந்த அறிக்கை அதிமுக உலுக்கி எடுத்துள்ளது. எப்படி இருந்தாலும் ஆனாலும் அரசுக்கு எதிர்க்கட்சி குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்கின்றது.

Categories

Tech |