புதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து ஆரஞ்சு மணடலத்தில் இருந்து சிவப்பு மணடலமாக புதுச்சேரி மாறியது. புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதிலும், ஏப்ரல் 1ம் தேதி மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டது. டெல்லி மதக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன.
அதற்கு பின்பு கோயம்பேடு பகுதியில் இருந்து பல்வேறு ஆகுதிகளுக்கு சென்றவர்கள் மூலம் தொற்று அதிகமானது. இந்த நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்தது. அதில் புதுச்சேரி மாவட்டத்தில் மட்டும் 17 ஆக உயர்ந்தது. மேலும் காரைக்கால், மாஹே ஆகிய பகுதிகள் ஆரஞ்சு மண்டலத்திலும், யணம் பசுமை மண்டலத்தில் உள்ளது.
இந்த நிலையில் ஆரஞ்சு மண்டலமாக இருந்த புதுச்சேரி மாவட்டம் இன்று 2 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து சிவப்பு மண்டலமாக உருவாகியுள்ளது. தற்போது செல்லிப்பட்டு, அறுமாசபுரம், காலாப்பட்டு ஆகிய பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.