ரமலான் தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது
கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ஊரடங்கு பிறப்பித்தது, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் சில தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தற்போது முஸ்லிம்கள் ரமலான் நோன்பு இருப்பதால் மே 25ஆம் தேதி மதுரையில் உள்ள பள்ளிவாசலில் 9 காலை 11 மணி வரை இரண்டு மணி நேரம் சிறப்பு தொழுகை நடத்த அனுமதி தர வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சாகுல் ஹமீது என்பவர் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார்.
அந்த வழக்கின் விசாரணை இன்று வந்தபோது வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மத்திய மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு விஷயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்தனர்.