அமெரிக்க பொருளாதாரம் மீளாமல் இருந்தால் வர இருக்கும் அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் படுதோல்வி அடைவார் என்ற கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் ஏராளமான தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கின்றது. இதனால் அங்கு பொருளாதாரம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பலருக்கும் வேலை பறிபோகி, வேலையில்லா திண்டாட்டம் தலைதூக்கியுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் அமெரிக்காவில் கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் தாக்கம் வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறும் அதிபர் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்று சொல்லாட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை துரித நடவடிக்கை எடுத்து சரி செய்யாவிட்டால் அதிபர் டிரம்ப் வரப்போகும் தேர்தலில் படுதோல்வி அடைவார் என ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் டொனால்டு டிரம்ப் 35 சதவீத வாக்குகள் மட்டுமே பெறுவார் என்றும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 65 சதவீத வாக்குகள் பெறுவார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதனால் டிரம்ப் தூக்கத்தை தொலைத்து அரண்டு போயுள்ளார்.