செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அம்மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 681 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 655 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் நேற்று ஒரே நாளில் செங்கல்பட்டில் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. மேலும் நேற்று வரை 233 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 416 ஆக இருந்தது. இந்த நிலையில், இன்று சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 442 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் திரும்பிய வண்ணம் இருப்பதால் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஏற்கனவே, கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பியவர்கள் மற்றும் அவர்களது குடுமனத்தினருக்கு கொரோனா தொற்று பரவி வருவது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 5 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.