ஆம்பன் புயலால் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பிரதமர் மோடி ஆய்வு செய்து வருகிறார்.
வங்கி கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த ஆம்பன் புயல் கடந்த 20ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு திஹா – சுந்தர்பன் பகுதிக்கு இடையே கரையைக் கடக்க தொடங்கியது. சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து சுமார் 7 மணியளவில் கரையை கடந்தது. இந்த புயலால் மேற்கு வங்கம் முழுவதும் உருக்குலைந்து காணப்படுகிறது.
மேலும் ஒடிசாவில் கனமழையால் கடுமையாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆம்பன் புயலால் மேற்குவங்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது. இவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த சூழலில் ஆம்பன் புயலால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி மேற்கு வங்கம் சென்றுள்ளார்.
#WATCH: PM Narendra Modi conducts aerial survey of areas affected by #CycloneAmphan in West Bengal. CM Mamata Banerjee is also accompanying. pic.twitter.com/Da7NebJhws
— ANI (@ANI) May 22, 2020
கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடியை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றார். இதனை தொடர்ந்து புயல் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி ஆய்வு செய்து வருகிறார். அவரும் அம்மாநில முதல்வர் மம்தாவும் இருக்கிறார். அதன் பின்னர் நிவாரண உதவிகள் குறித்து முதல்வர் மம்தாவிடம் ஆலோசனை நடத்த உள்ளார்.