Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய ஐ.பி.எல் போட்டி : ராஜஸ்தான் vs பஞ்சாப் அணிகள் மோதல்….!!

இன்று நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன 

இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.  இந்த போட்டி ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்..

ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் பென் ஸ்டோக்ஸ். ஜாஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன் போன்ற அதிரடி ஆட்டக்காரர்களும், பவுலிங்கில் ஜோப்ரா ஆர்ச்சர், ஜெயதேவ் உனத் கட்,  போன்ற சிறப்பான வீரர்கள் உள்ளனர்.

 

அதே போல அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் கிறிஸ் கெயில்,மந்தீப் சிங், டேவிட் மில்லர் ,கருண் நாயர், மயாங் அகர்வால் போன்ற அதிரடி வீரர்களும் பவுலிங்கில் கேப்டன் அஸ்வின், முகமது ஷமி, ஆண்ட்ரு டை, முருகன் அஸ்வின் ஆகிய சிறந்த பந்து வீச்சாளர்களும் மற்றும் இந்த ஐபிஎல் போட்டியில் அதிக தொகையான 8.4 கோடிக்கு  ஏலம் எடுக்கப்பட்ட வருண் சக்கரவர்த்தியும் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் சம பலம் வாய்ந்த அணியாக திகழ்வதால் இன்றைய போட்டியில் விறு விறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

 

Categories

Tech |