Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…பொறுப்புகள் கூடும்…சிந்தனை மேலோங்கும்…!

மிதுன ராசி அன்பர்களே …!     இன்று புதிய பொறுப்புகள் வந்து சேரும். புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். இடமாற்றம் திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். மற்றவரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும். இன்று காரியங்களில் ஏற்பட்ட தடை நீங்கி திருப்தியான சூழல் நடந்து முடியும். சாதுரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும்.

பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அவ்வப்போது திடீர் மன குழப்பம் மட்டும் இருந்து கொண்டிருக்கும். எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்காமல் பொறுமையாக இருங்கள். முடிந்தால் இறை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். மனம் அமைதியாக இருக்கும். மாலை நேரங்களில் இசைப் பாடலை ரசித்து மகிழுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |