Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…கோபங்கள் உண்டாகலாம்…நிதானம் தேவை…!

துலாம் ராசி அன்பர்களே …!  இன்று சிந்தனை மேலோங்கும். உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாக தான் இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும் போது ரொம்ப கவனமாக செல்ல வேண்டும். இடம் பூமி வாங்கக் கூடிய யோகங்கள் இருந்தாலும் அதில் உள்ள சிக்கல்களை சரியாக பார்த்து அதற்கு ஏற்றார் போல் செயல் படுவது நல்லது. மாற்றுக் கருத்துடையோர் இடம் தயவுசெய்து விலகியே இருங்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் கோபங்கள் உண்டாகலாம்.

கணவர் மனைவிக்கிடையே கோபமாக பேசிவிட்டு அமைதியாக எதையும் எடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். கூடுமானவரை பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். மிக முக்கியமாக தந்தையிடம் எந்தவித வாக்குவாதமும் செய்யாதீர்கள். அதேபோல நான் பணம் வாங்கி தருகிறேன் என்று மற்றவர்களுக்கு பண உதவிகள் எதுவும் செய்யாதீர்கள். தேவையில்லாத சிக்கலில் தயவு செய்து மாட்டிக் கொள்ள வேண்டாம். கடுமையான உழைப்பு இருக்கும் உழைப்பிற்கேற்ற ஊதியம் இருக்கும்.

அதேபோல முடிந்த அளவு மற்றவரிடம் நிதானமாக பேசுவதை பழகிக் கொள்ளுங்கள். இன்று காதலர்கள் பொறுமை காக்க வேண்டும் வாக்குவாதத்தில் கண்டிப்பாக ஈடுபடக்கூடாது. முக்கியமான பணியை நீங்கள் செய்யும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள் : 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சாம்பல் நிறம்.

Categories

Tech |