தனுசு ராசி அன்பர்களே …! சிவபெருமானை வழிபட்டு சிறப்புகள் வந்து சேரும். முன்னேற்றப்பாதையில் செல்லும். அரசு துறைகளில் உதவிகள் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சுய தொழில் முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும்.
வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். புதிய பாதை புலப்படும் நாளாக இருக்கும். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். புதிதாக காதலில் விழக் கூடிய சூழலும் இருக்கும். இன்று எந்த ஒரு பிரச்சனையும் நீங்கள் சாமர்த்தியமாக கையாண்டு அதை சரி செய்வீர்கள்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மேலும் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்குஅன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்.