மீன ராசி அன்பர்களே…! சோர்வு நீங்கி சுறுசுறுப்பு உடன் பணிபுரியும் நாளாக இருக்கும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பார்கள். பற்றாக்குறை அகலும். அரசியல்வாதிகளின் ஆதரவும் கிடைக்கும். மாலை நேரத்தில் எதிர்பாராத நன்மை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபமும் உருவாகும். பணியின் காரணமாக கொஞ்சம் அலைச்சல் இருக்கும்.
அலுவலக பணிகளை நீங்கள் மட்டுமே கவனிக்கும் படியாக இருக்கும். சிரமம் இன்றி எதையும் செய்து முடிக்க பாருங்கள். பயணங்கள் செல்வதாக இருந்தால் கவனமாக செல்லுங்கள். உடல் ஆரோக்கியத்தில் ஒரு கண் இருக்கட்டும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். அதேபோல உணவுக்கட்டுப்பாடு விஷயத்திலும் கவனமாக இருங்கள்.
கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் ஓரளவு சிறப்பை கொடுத்தாலும் புதிதாக கடன் மட்டும் வாங்க வேண்டாம். புதிய முயற்சிகளை கூடுமானவரை தள்ளிப்போடுவது ரொம்ப நல்லது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெறும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.