நாடாளுமன்ற , சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகின்றது .
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது . தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் வாக்குபதிவில் 18 சட்டமன்றத்திற்க்கான இடைத்தேர்தல் நடைபெறுகின்றது . இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களின் வாக்கு சேகரிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர் . மேலும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19_ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது .
கடந்த 4 நாட்களாக நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் இதுவரை 179 பேர் வேட்புமனு அளித்துள்ளனர். இதில் 29 பேர் பெண்களும் , மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட பாரதி கண்ணம்மா என்ற திருநங்கையும் வேட்புமனு அளித்துள்ளனர். சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 68 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதில் 18 பேர் பெண் வேட்பாளர் ஆவர். நேற்று (ஞாயிறு ) மற்றும் நேற்று முன்தினம் ( சனி ) விடுமுறை என்பதால் இன்று அதிகமானோர் வேட்புமனுத்தாக்கள் செய்ய உள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.