Categories
தேசிய செய்திகள்

வெறும் 3 பேர் தானா ? ”கெத்து காட்டிய இந்தியா” வியந்து போன உலக நாடுகள் …!!

கொரோனா தடுப்பு பணிகளில் இந்தியாவின் செயல்பாடுகளை கண்டு உலக நாடுகள் வியந்து பார்க்கின்றது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொடுந் தொற்றான கொரோனா 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கோர தாண்டவத்தை ஆடி வருகிறது. உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில், தொழில்நுட்பத்தில் எங்களை மிஞ்சுவது யாருமில்லை என்று சொல்லக்கூடிய வல்லரசு நாடுகளும் கொரோனா பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கின்றது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா பரவத் தொடங்கிய சீனா மீது  தீராத கோபத்தோடு இருக்கின்றன. கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கியுள்ள அமெரிக்கா செய்வதறியாது திகைத்து வருகின்றது.

உலக அளவில் 53 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 3 லட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. அதிகபட்சமாக அமெரிக்கா கொரோனாவால் உருக்குலைந்து போய் உள்ளது. அங்கு மட்டும் 16 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, உயிரிழப்பு ஒரு லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. அதேபோல வல்லரசு நாடுகளான ஆதிக்கம் செலுத்தும் பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின், பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ்,  ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனாவின் தீவிரம் தலைவிரித்தாடுகிறது.

இதுவரைக்கும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாததால் உலக நாடுகள் அனைத்தும் சமூக விலைகளை வலியுறுத்தி ஊரடங்கு பிறப்பித்தது கொரோனாவை கட்டுப்படுத்தி வருகின்றது. இதே நிலை தான் இந்தியாவிலும் ஆனால் மற்ற நாடுகளுடன் இந்தியா ஒப்பிட்டால் இந்தியா மிகவும் சிறப்பாகவே கொரோனவை கையாண்டு வருகின்றது. குறிப்பாக வல்லரசு நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனாவின் உயிரிழப்பு உலகநாடுகளை வியப்படையச் செய்துள்ளது.

இந்தியாவைவிட அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவை விட இந்தியா கொரோனாவை மிகவும் நுட்பமாக கையாண்டு வருவது புள்ளிவிவரத்தில் தெரிகின்றது. அதிக உயிரிழப்புக்களை சந்தித்த அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரேசில் ஆகிய நாடுகளை விட இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் மிகவும் குறைவு. சொல்லப்போனால் இந்தியாவின் உயிரிழப்பு விகிதத்தை அவர்களால் கற்பனை கூட பண்ண முடியாது. அதே போல சீனாவுடன் ஒப்பிட்டு பார்க்கும் போதும் இந்தியாவே சிறப்பானதாக இருந்துள்ளது.

புள்ளி விவரம் படி பார்த்தல் :

அமெரிக்கா:

பாதிப்பு – 1,645,094,

இறப்பு – 97,647,

1மில்லியனுக்கு இறப்பு – 295

பிரேசில்:

பாதிப்பு – 332,382,

இறப்பு – 21,116,

1மில்லியனுக்கு இறப்பு – 99

ரஷ்யா:

பாதிப்பு – 326,448,

இறப்பு – 3,249,

1மில்லியனுக்கு இறப்பு – 22

ஸ்பெயின்:

பாதிப்பு – 281,904,

இறப்பு – 28,628,

1மில்லியனுக்கு இறப்பு – 612

பிரிட்டன்:

பாதிப்பு – 254,195,

இறப்பு – 36,393,

1மில்லியனுக்கு இறப்பு – 536

இத்தாலி:

பாதிப்பு – 228,658,

இறப்பு – 32,616,

1மில்லியனுக்கு இறப்பு – 539

பிரான்ஸ்:

பாதிப்பு – 182,219,

இறப்பு – 28,289,

1மில்லியனுக்கு இறப்பு – 433

ஜெர்மனி:

பாதிப்பு – 179,713,

இறப்பு – 8,352,

1மில்லியனுக்கு இறப்பு – 100

இந்தியா:

பாதிப்பு – 125,149,

இறப்பு – 3,728,

1மில்லியனுக்கு இறப்பு – 3

சீனா:

பாதிப்பு – 82,971,

இறப்பு – 4,634,

1மில்லியனுக்கு இறப்பு – 3

கொரோனா உயிரிழப்புகளை மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் 10 லட்சம் மக்களுக்கு எத்தனை பேர் உயிரிழக்கின்றார்கள் என்ற தகவலை மேற்காணும் புள்ளி விவர்ம காட்டுகின்றது. இதில் சீனாவும் 10 லட்சம் பேருக்கும் 3 என்ற எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டாலும் இந்தியாவை விட சீனாவில் கொரோனா பாதிப்பு குறைவு, உயிரிழப்பு அதிகம் என்பதால் இந்தியாவே சீனாவை விட நல்ல சிகிச்சை கொடுத்து வருகின்றது.

Categories

Tech |