Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக பனங்காட்டு நரி…. ! ”டெல்லி எடுபிடிகளுக்கு அஞ்சாது” வெளுத்து வாங்கிய ஸ்டாலின் …!!

திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கைத்துக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இன்று காலை கைது செயப்பட்டார். இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் உத்தரவுக்காக காத்திருக்கும் நிலையில் ஆர்எஸ். பாரதி கைதுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனங்களை தெரிவித்து இருக்கிறார். ஊழலையும் தனது நிர்வாக தோல்வியையும் திசை திருப்ப குரோத எண்ணத்துடன் எடப்பாடி பழனிச்சாமி ஆர் எஸ்பாரதியை அதிகாலையில் கைது செய்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நீண்ட அறிக்கை ஆக வெயிடப்பட்டுள்ள அதில், சென்னை அன்பகத்தில் பேசியதாக ஒரு சர்சையை எழுப்பி அது தொடர்பாக அவர் உரிய விளக்கம் அளித்தும், மனப்பூர்வமான வருத்தம் தெரிவித்த நிலையில் இந்த அராஜக நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.பல்வேறு அமைச்சர்கள் மீது ஆர் எஸ் பாரதி லஞ்ச ஊழல் தடுப்பு துறை பல்வேறு ஊழல் புகார்கள் அளித்து உள்ளார்.நெடுஞ்சாலை துறையில் நடைபெற்ற ஊழல் ஊழல் குறித்து விரிவான புகார் கொடுத்துள்ளார்.

முதலமைச்சர், தனது ஊழலையும் நிர்வாகத்திறனை  திசை திருப்ப குரோத எண்ணத்துடன் இதுபோன்ற ஒரு நடவடிக்கை எடுத்துள்ளதாக சொல்லியுள்ளார். இது ஒரு மாபெரும் மக்கள் இயக்கம், பனங்காட்டு நரி எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகள் சலசலப்புக்கோ, பொய் வழக்குகளில் மிரட்டலுக்கும் என்றைக்கும் அஞ்சாது என்றும் அந்த அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.கொரோனா என்ற கொடிய வைரஸ் தாக்குதலிலும் எடப்பாடி அரசு இது போன்ற  கீழ்த்தரமான அரசியல் செய்வது வெட்கக் கேடானது என்று அந்த அறிக்கையை முடிவு செய்துள்ளார்.

Categories

Tech |