Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை

உங்க இஷ்டத்துக்கு செயல்படாதீஙங்க…! சாட்டையை சுழற்றிய அமைச்சர் ..!!

தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் நான்கு கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு முடிந்த பிறகு ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கூட ஜூன் 15ஆம் தேதி ஜூன் முதல் 25-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு அறிவிப்பு வெளியானதற்கு பின்பு, பல்வேறு தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தியதாக குற்றம் சாட்டு எழுந்தது, பள்ளிகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் சில தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையையும் நடத்துவதாக புகார் எழுந்ததையடுத்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இப்படியாக செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும் போது, தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக்கு பிறகே தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் . தேர்வுக்கு முன்பு மாணவர் சேர்க்கை நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |