ஈரோடு கவுந்தபாடியில் புதிதாக ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றால் மக்கள் அச்சப்பட என ஆட்சியர் கதிரவன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் இதுவரை 14,753 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. தமிழகத்தில் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,128 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஈரோடு, திருவாரூர், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து சற்று மீண்டு வருகின்றது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 37 நாட்களுக்கு பின் நேற்று ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
அங்கு ஏற்கனவே 70 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதில் 69 பேரும் குணமடைந்து வீடு திரும்பி இருந்தனர். இதையடுத்து கடந்த 37 தினங்களாக யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இதனால் ஆரஞ்சு நிறத்தில் இருந்த ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலத்துக்கு மாறியது. இதனால் பல்வேறு தளர்வுகள் ஈரோடு மாவட்டத்திற்கு கொடுத்து வந்த நிலையில் 37 நாட்களுக்கு பின்பு நேற்று ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்த ஒருவருக்கு எலும்பு அறுவை சிகிச்சை நோய் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக சேலத்துக்கு சென்றிருக்கிறார். அவருக்கு தொடர்ச்சியாக பரிசோதனை செய்தபோது கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கவுந்தபாடியில் புதிதாக ஏற்பட்டுள்ள தொற்றால் மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறியுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார், மேலும் அவிநாசி அத்திக்கடவு, ஊராட்சி கோட்ட பணிகள் குறைந்த பணியாளர்களுடன் தொய்வின்றி நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்துள்ளார் .