மத்திய அரசு கேட்ட நிதியை கொடுக்கவில்லை, விவசாயிகளுக்கு துணை நிற்போம் என என முதல்வர் மத்திய அரசுக்கு எதிராக பேசியுள்ளார்.
நேற்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர், மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்தார். அதில், படிப்படியாக எல்லாமே தளர்வு செய்து வருகின்றோம், எல்லாமே தளர்வு பண்ணி வேளாண்மையில் முழு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தொழிற்சாலைகளில் பாதி அளவுக்கு திறந்து பணிகளைச் செய்யலாம். விதிமுறைகளுக்கு உட்பட்டு, தொழிற்சாலைகள் பணியாளர் சமூக இடைவெளி பின்பற்றி பணி செய்ய வேண்டும். கிருமிநாசினி அடிக்கடி தொழிற்சாலையில் தெளிக்க வேண்டும்.55 வயதுக்கு மேல் இருந்தால் அவர்களை பணியில் அமர்த்தக் கூடாது.
நமக்கு கிடைக்கவேண்டிய ஜிஎஸ்டி நிதி கொடுப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். ஏப்ரல் மாதம் நமக்கு கிடைக்க வேண்டிய வருவாய் குறைஞ்சு போச்சு. சுமார் 35,000 கோடி இழப்பு ஏற்படும் என்று நிதித்துறை சொல்லியிருக்காங்க. அதை சரி கட்டுவதற்காக அரசு பல்வேறு வகைகளில் நடவடிக்கை எடுத்துள்ளோம் . அதற்கான அறிவிப்பு கொடுத்திருக்கிறோம். இழப்பீட்டை சரி செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் வளர்ச்சிப்பணி, குறையாமல் பார்த்துக் கொள்கிறோம்.
கொரோனா நிவாரண நிதியை மத்திய அரசு படிப்படியாக கொடுத்து கிட்டு இருக்காங்க. கேட்ட அளவுக்கு கொடுக்கல. இலவச மின்சாரம் என்பது பொன்மனச்செம்மல் எம் ஜி ஆரின் கனவு திட்டம். இது விவசாய நலன் காக்கும் அரசாக செயல்படுகிறது. இன்றைக்கு இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு தொடர்ந்து கிடைப்பதற்கு எங்களுடைய அரசு துணை நிற்கும். எஸ்எஸ்எல்சி தேர்வு 15 மாநிலத்தில் தேர்வு முடிச்சிட்டாங்க . ஜூன் 1-ஆம் தேதி தேர்வு நடைபெறுவதாக இருந்தது, மக்களுடைய கோரிக்கைகளை ஏற்று இப்போது 15 ஆம் தேதி பள்ளி கல்வித்துறை தள்ளிவைத்துள்ளது.
தேர்வு எழுதுகின்ற மாணவர்களுக்கு அனைத்து வசதிகள் செய்யப்படும், மத்திய அரசின் வழிகாட்டி அந்த தேர்வு நடைபெறும். தமிழ்நாடு மட்டுமல்ல உலகமே நெருக்கடியில் இருக்குது. வல்லரசு நாடுகள் நெருக்கடியில் இருக்கின்றது. வளர்ந்த நாடுகள் எல்லாம் நெருக்கடியில் இருக்கிறது. எல்லா பகுதிகளுமே கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்த காரணத்தினால் உலகமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. இந்தியாவும் ஸ்தம்பித்தது, தமிழ்நாடும் ஸ்தம்பித்துள்ளது என்று முதலைமைசர் தெரிவித்தார்.