மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையராக இருந்த நடராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
8 வருடங்களுக்கு பிறகு சேலம் மண்டல அறநிலைய துறை இணை ஆணையராக நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலைய துறையில் ஒரு இடத்தில் 3 வருடமே பதவியில் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் இணை ஆணையராக நடராஜன் கடந்த 2014ம் வருடம் ஜூன் மாதம் 2ம் தேதி அன்று பணியமர்த்தப்பட்டார்.
சுமார் 8 வருடங்கள் பாணியாற்றிய பிறகு தற்போது அவர் சேலம் மண்டல அறநிலையத்துறையின் இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நிர்வாகத்துறையை இந்துசமய அறநிலையத்துறையினர் கவனித்து வருகிறார்கள். அதன் நிர்வாக பொறுப்பு அனைத்தும் இணை ஆணையர் பொறுப்பில் கண்காணிக்கப்பட்டு வரும். அந்த பதவியில் 8 வருடங்கள் நீடித்த நடராஜன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது, மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையராக திருவேற்காட்டில் பணியாற்றும் செல்லத்துரை என்பவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக வெகு விமர்சையாக நடைபெற்று வரும் சித்திரை பெருந்திருவிழா பக்தர்கள் இன்றி கோவிலில் நடைபெற்றது. இந்த நிலையில், இவரின் பணியிடமாற்றம் என்பது சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.