மேட்டூர் அனல் மின் நிலைய இரண்டாவது அணு உலையில் பழுது நீக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஆறு அணு உலைகள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் அணு உலை அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், 3ம் மற்றும் 4ம் உலைகள் கட்டும் பணிகள் நடைபெறுகிறது. கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இரண்டாவது அணு உலையில் கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி வருடாந்திர பணி காரணமாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் பராமரிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து மின் உற்பத்தி மார்ச் மாதம் மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில் 2வது உலையில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது அணு உலையில் உள்ள ஜெனரேட்டரின் பழுது ஏற்பட்டதன் காரணமாக மின் உற்பத்தியானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஜென்ரேட்டரை சரி செய்ய ரஷ்ய விஞானிகள் குழுவினர் கூடங்குளம் வந்துள்ளனர். இதனால் மின் உற்பத்தியானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சரி செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் மின் உற்பத்தியானது தொடங்கியுள்ளது. இதனால் இன்று மேட்டூர் அனல் மின் நிலையத்தின் இரண்டு பிரிவுகளிலும் முழு உற்பத்தியான 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.