Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 624 பேருக்கு கொரோனா உறுதி… 10 ஆயிரத்தை நெருக்கும் பாதிப்பு எண்ணிக்கை!

சென்னையில் இன்று புதிதாக 624 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 624 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 9,989 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

4 மண்டலங்களில் 1000க்கும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தை சேர்ந்த 710 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 49 பேர் என மொத்தம் 759 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 429 பேர் ஆண்கள், 330 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செங்கல்பட்டில் 39 பேரும், திருவள்ளூரில் 22 பேரும், திருவண்ணாமலை – 11 , நெல்லை – 11, தூத்துக்குடி – 5, ராமநாதபுரம் – 3, காஞ்சிபுரத்தில் 13 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது 7,915 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 12,155 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 3,97,340 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 41 அரசு மற்றும் 27 தனியார் மையங்கள் என மொத்தம் 68 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |