Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…வேலைச்சுமை அதிகரிக்கும்…ஊதிய உயர்வு கிடைக்கும்…!

கடக ராசி அன்பர்களே …!      இன்று  முயற்சிகளில் வெற்றி கிடைத்து முன்னேற்றம் கூடும் நாள் ஆக இருக்கும். உடன் பிறப்புகளால் நெருக்கம் உண்டாகும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து கொடுப்பார்கள். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு பெறுவதற்கான அறிகுறிகள் இருக்கும். எதிலும் லாபத்தை எதிர்பார்க்க முடியும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம்.

அதிக உழைப்பும் பெரிய வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். நிதி மேலாண்மை ஓரளவு சீர்படும். மனைவியிடம் அன்பாக நடக்க முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். பிள்ளைகளிடமும் அன்பாக நடந்து கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித தடையுமில்லாமல் நல்ல முன்னேற்றமாக இருக்கும்.

உள்ளமும் உற்சாகமாகவே காணப்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் அனைத்து விஷயங்களும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 6

 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |